Main Page
-
Recent changes
- Kishore.org
வாழ்க்கை
New name
Show page
Syntax
*மலரும் நினைவுகள்..* *இல்வாழ்வில் அடியெடுத்து வைத்தபின் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் வேகமாக வளர்ந்தும் விட்டார்கள்.* பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள். *நாம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக முதுமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்.* நம் வயதுக்கேற்ற சின்னச் சின்ன உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும் ஆரோக்கியத்தை காத்துக்கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். *வாழ்வினை திரும்பிப் பார்க்கும்போது* *மலைப்பாக இருக்கிறது.* எத்தனையோ சந்தோசங்களும்.. சிரிப்புகளும்.. எத்தனையோ துக்கங்களும்... கண்ணீரும்... எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம். *நம் மீது அன்பைப் பொழிந்த அல்லது நாம் அன்பு செலுத்திய நிறைய பேர் இன்று நம்மிடையே இல்லை.* இயற்கைச் சீற்றங்கள் பேரழிவுகள், விபத்துக்கள், கொடிய மற்றும் கொள்ளை நோய்கள், பஞ்சங்கள், போர்கள், தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து இதுவரை தப்பித்துக் கொண்டோம். *நாம் ஆசையாய்* *நினைத்த விசயங்கள் சில கைகூடாததாலும்* *நாம் கொஞ்சமும் நினைத்தே பார்த்திராத* *சில விசயங்கள் நடந்தேறியதாலும்* *மனம் வாக்கு செயல் மூன்றிலும் மாற்றம் கண்டோம்...* பெரியவர்களின் நிறைய ஆசீர்வாதங்கள், சில சமயங்களில் காயப்படுத்திய சொற்கள் இரண்டையும் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டோம். *யாரெல்லாம்* *நம்மை உண்மையாய்* *நேசிப்பவர்கள்,* *யாரெல்லாம்* *உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசுபவர்கள்,* *யாரெல்லாம் பாசமாய் இருப்பது போல* *நடிப்பவர்கள் என்பதை யெல்லாம்* *கண்டுகொண்டோம்.* சில நண்பர்கள் சில உறவுகள் பிரிந்து போனதையும், சில நண்பர்கள் சில உறவுகள் நம்மை மறந்து போனதையும் இயல்பாய் எடுத்துக் கொண்டோம். *புதுப்புது* *இடங்களைச்* *சுற்றிப்பார்த்தும்* *விதவிதமான* *உணவுகளை ருசித்துப் பார்த்தும்* *மகிழ்ந்த தருணங்களை நினைவில்* *பதியவைத்துக்* *கொண்டோம்.* வாழ்வின் இக்கட்டான நேரங்களில் ஆத்மார்த்தமான நண்பன் அல்லது தோழியிடமிருந்து ஆலோசனையைப் பெற்று அதிலிருந்து மீண்டு வந்தோம். *வேறு வேறு இடங்களில் வேறு வேறு மனிதர்களுடன்* *வேறு வேறு பதவிகளில் பணி புரிந்து நிறைய* *அனுபவங்களை* *சேகரித்துக்* *கொண்டோம்...* பிறந்தநாள், திருமண நாள், சுப நிகழ்வுகள், விழாக்கள், புதுவருடம் போன்ற விசேஷ தினங்கள்,கோவில் திருவிழா, தீபாவளி மற்றும் தைப்பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூடி மகிழ்ந்தோம். *பணம் மட்டுமே வாழ்க்கையில்லை எனப் புரிந்து கொண்டோம்.* பணம், பட்டம் பதவி புகழ் , வீடு, தோட்டம் , நகை , கார், சொத்து சுகம் உறவுகள் எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை என அறிந்துகொண்டோம்.. *நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை அது* *நமக்குள்ளேதான் இருக்கிறது என்று* *தெரிந்து கொண்டோம்.* எல்லாவற்றையும் மன்னித்துவிடவும் சிலவற்றையாவது மறந்துவிடவும் கற்றுக்கொண்டோம். *எல்லாமும் கடந்து போகும் எனவும்* *எதுவும் நிரந்தரமில்லை* *எனவும்* *புரிந்து கொண்டோம்..* காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும். *புத்தகங்களை வாசிப்பதும்,* *இயற்கையை ரசிப்பதும்,* *இனிய இசை கேட்பதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும் மனதுக்கு ஆறுதலான விசயங்கள்.* எனவே இக்கணத்தில் வாழ்வோம் ! *வாழ்க்கையே* *ஒரு திருவிழாதான்.* *நாளும் அதைக் கொண்டாடுவோம்.*அன்புடன்.. இரா. முத்துகுமார {tags: Time, Life}
Password
Summary of changes