Main Page
-
Recent changes
- Kishore.org
Kanpur1
New name
Show page
Syntax
அமானுஷ்ய கோவில் - கான்பூர் பகவான் ஜெகந்நாதர் ஆலயம். வருடம் எவ்வளவு மழை பொழியும் என்பதை கூறும்... அமானுஷ்ய கோவில் !! மழையின் அளவை முன்பே கூறும் அமானுஷ்ய கோவில் !! அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்னும் பல அமானுஷ்ய, அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத அதிசயம் கான்பூரில் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தை பார்த்து அறிவதுதான் வழக்கம். ஆனால், ஒரே ஒரு ஊரில் உள்ள மக்கள் மட்டும் வானத்தை பார்க்கமாட்டார்கள். மாறாக அங்குள்ள கோவிலிற்கு சென்று அறிவார்கள். ஆம். மழை வருமா? இல்லையா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அதிசய கோவில் உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்திருக்கிறது பகவான் ஜெகந்நாதர் ஆலயம். சுமார் 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலின் மேற்கூரையில் இருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது. சொட்டும் நீரின் அளவை பொறுத்து அந்த வருடம் எவ்வளவு மழை பொழியும் என்பதை அந்த ஊர் மக்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக, அந்த கோவிலின் உள்பகுதியில் மழை பெய்யத் தொடங்கி விடுகிறது. ஏழு நாட்களும் மழை நிற்பதே இல்லை. ஆனால், வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோவிலின் உள்ளே மழை நின்று விடுகிறது. இதற்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை. அந்த கோவிலின் உள்ளே மழை பெய்யத் தொடங்கிய ஏழு நாட்களில் பருவ மழை தொடங்கிவிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். ஆனால், இதுவரையிலும் அதற்கான விடையை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள், இங்கு சொட்டும் நீரின் அளவை பொறுத்தே அந்த வருடத்தில் என்ன பயிரிடலாம் என்பதை முடிவு செய்கின்றனர். அதோடு இந்த கோவிலில் உள்ள கடவுளுக்கு வருடா வருடம் சிறப்பு பூஜை செய்து, அதிக அளவில் நீர் சொட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றனர். {tags: Place}
Password
Summary of changes