வாழ்க்கை
This revision is from 2022/01/29 18:42. You can Restore it.
- மலரும் நினைவுகள்..*
- இல்வாழ்வில் அடியெடுத்து வைத்தபின் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் வேகமாக வளர்ந்தும் விட்டார்கள்.*
பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள்.
- நாம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக முதுமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்.*
நம் வயதுக்கேற்ற சின்னச் சின்ன
உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும் ஆரோக்கியத்தை காத்துக்கொண்டு நாட்களை நகர்த்திக்
கொண்டிருக்கிறோம்.
- வாழ்வினை திரும்பிப் பார்க்கும்போது*
- மலைப்பாக இருக்கிறது.*
எத்தனையோ சந்தோசங்களும்.. சிரிப்புகளும்.. எத்தனையோ துக்கங்களும்... கண்ணீரும்... எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம்.
- நம் மீது அன்பைப் பொழிந்த அல்லது நாம் அன்பு செலுத்திய நிறைய பேர் இன்று நம்மிடையே இல்லை.*
இயற்கைச் சீற்றங்கள்
பேரழிவுகள், விபத்துக்கள்,
கொடிய மற்றும் கொள்ளை நோய்கள், பஞ்சங்கள்,
போர்கள், தீவிரவாதம்
ஆகியவற்றிலிருந்து இதுவரை
தப்பித்துக் கொண்டோம்.
- நாம் ஆசையாய்* *நினைத்த விசயங்கள் சில கைகூடாததாலும்*
- நாம் கொஞ்சமும் நினைத்தே பார்த்திராத*
- சில விசயங்கள் நடந்தேறியதாலும்*
- மனம் வாக்கு செயல் மூன்றிலும் மாற்றம் கண்டோம்...*
பெரியவர்களின்
நிறைய ஆசீர்வாதங்கள்,
சில சமயங்களில் காயப்படுத்திய சொற்கள் இரண்டையும் சந்தோசமாய் ஏற்றுக்
கொண்டோம்.
- யாரெல்லாம்*
- நம்மை உண்மையாய்* *நேசிப்பவர்கள்,*
- யாரெல்லாம்* *உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசுபவர்கள்,* *யாரெல்லாம் பாசமாய் இருப்பது போல* *நடிப்பவர்கள் என்பதை யெல்லாம்* *கண்டுகொண்டோம்.*
சில நண்பர்கள்
சில உறவுகள்
பிரிந்து போனதையும்,
சில நண்பர்கள்
சில உறவுகள்
நம்மை மறந்து போனதையும் இயல்பாய் எடுத்துக் கொண்டோம்.
- புதுப்புது*
- இடங்களைச்* *சுற்றிப்பார்த்தும்*
- விதவிதமான* *உணவுகளை ருசித்துப் பார்த்தும்* *மகிழ்ந்த தருணங்களை நினைவில்* *பதியவைத்துக்*
- கொண்டோம்.*
வாழ்வின் இக்கட்டான நேரங்களில் ஆத்மார்த்தமான நண்பன் அல்லது தோழியிடமிருந்து
ஆலோசனையைப் பெற்று அதிலிருந்து மீண்டு வந்தோம்.
- வேறு வேறு இடங்களில் வேறு வேறு மனிதர்களுடன்*
- வேறு வேறு பதவிகளில் பணி புரிந்து நிறைய* *அனுபவங்களை*
- சேகரித்துக்*
- கொண்டோம்...*
பிறந்தநாள்,
திருமண நாள்,
சுப நிகழ்வுகள், விழாக்கள், புதுவருடம் போன்ற விசேஷ தினங்கள்,கோவில் திருவிழா,
தீபாவளி மற்றும் தைப்பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூடி மகிழ்ந்தோம்.
- பணம் மட்டுமே வாழ்க்கையில்லை எனப் புரிந்து கொண்டோம்.*
பணம்,
பட்டம் பதவி புகழ் ,
வீடு, தோட்டம் ,
நகை , கார்,
சொத்து சுகம் உறவுகள்
எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை என அறிந்துகொண்டோம்..
- நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை அது* *நமக்குள்ளேதான் இருக்கிறது என்று* *தெரிந்து கொண்டோம்.*
எல்லாவற்றையும் மன்னித்துவிடவும்
சிலவற்றையாவது மறந்துவிடவும்
கற்றுக்கொண்டோம்.
- எல்லாமும் கடந்து போகும் எனவும்*
- எதுவும் நிரந்தரமில்லை*
- எனவும்*
- புரிந்து கொண்டோம்..*
காலம்
எல்லாக் காயங்களையும் ஆற்றும்.
- புத்தகங்களை வாசிப்பதும்,*
- இயற்கையை ரசிப்பதும்,*
- இனிய இசை கேட்பதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும் மனதுக்கு ஆறுதலான விசயங்கள்.*
எனவே
இக்கணத்தில் வாழ்வோம் !
- வாழ்க்கையே*
- ஒரு திருவிழாதான்.*
- நாளும் அதைக் கொண்டாடுவோம்.*அன்புடன்..
இரா. முத்துகுமார