வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி

ரம்பை தன் தவத்தை கலைக்க வந்தவுடன், விச்வாமித்ரர் கோபத்தால் அவளை சபிக்கிறார். பின்னர் மனம் வருந்தி தன் மூச்சையும் பேச்சையும் அடக்கி, ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்டு தவம் செய்கிறார். பிரம்மா தேவர்களுடன் வந்து அவருக்கு பிரம்மரிஷி என்ற நிலையை அருளுகிறார். விஸ்வாமித்ரர், வசிஷ்ட பகவான் தன்னை பிரம்மரிஷி என்று ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்ட, வசிஷ்டரும் அங்கு வந்து அவ்வாறே அனுக்ரஹம் செய்கிறார் — வால்மீகி ராமாயணம் என்னும் தேன் — https://valmikiramayanam.in/?p=381